மனமுருக வாழ்த்து சொல்லிய மாணவர்கள்... கண்கலங்கி நின்ற ஆசிரியர்!
ஆசிரியர் ஒருவரின் பிறந்தநாளுக்கு மாணவர்கள் வாழ்த்து சொல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நம் வாழ்வில் ஒவ்வொருவருக்கும் முக்கியமானவர்கள் என பலர் இருப்பர். அந்த முக்கியமானவர்களுள் கண்டிப்பாக ஆசிரியர்கள் இருப்பார்கள். பள்ளிப்பருவத்தில் நமது ஆசிரியர் யாருக்காவது பிறந்தநாள் வந்தால் மாணவர்கள் அனைவரும் இணைந்து கேக் வாங்கி வந்து அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவது வழக்கம். அதுபோல சமீப காலமாகவே மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுக்கும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஆசிரியர் ஒருவருக்கு அவரது வகுப்பு மாணவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கின்றனர். ஆனால் அந்த வீடியோ அனைவரையும் கண்கலங்க வைக்கிறது. ஏனென்றால், அந்த ஆசிரியரின் மகன் ஒரு வருடத்திற்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதனால் அவர் மிகவும் கவலையில் இருந்துள்ளார். இந்நிலையில்தான் அவரின் பிறந்தநாள் வந்துள்ளது. தங்களின் ஆசிரியரை மகிழ்விக்க இறந்த மகனின் பெயரை லைட்டிங் ஸ்டிக்குகளால் எழுதி, ஒரு பாடலையும் பாடியுள்ளனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு அனைவரையும் கண்கலங்க வைக்கிறது. இதற்கு பல பயனர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துளனர். அதில் சிலவற்றை இங்கு காண்போம்.
- கஷ்டமான சூழ்நிலைதான். ஆனால் இந்த குழந்தைகள் அற்புதமானவர்கள்.
- நான் அழவில்லை. ஆனால் ஏனோ கண்கலங்குகிறது.
- அந்த ஆசிரியரின் இழப்புக்கு வருந்துகிறேன். ஆனால் அவர்களுக்கு கிடைத்த மாணவர்களை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்.