சாம்பியன்ஸ் டிராபி | ஃபீல்டிங்கில் சொதப்பிய பாகிஸ்தான் அணி!
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் இன்று தொடங்கியுள்ளது. கராச்சி மைதானத்தில் நடைபெற்றுவரும் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் , நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வில் யங் மற்றும் டெவான் கான்வே களமிறங்கினர். இதில் நிலைத்து ஆடிய வில் யங் (107) சதம் விளாசி அசத்தினர். அதேபோல், அதிரடியாக விளையாடி டாம் லாதம் (118) ரன்கள் அடித்து சதம் விளாசினார். இறுதியாக நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து, 321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கி ஆடி வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் அணி வீரர்கள் மிக மோசமாக ஃபீல்டீங் செய்ததாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பந்துவீச்சு, பேட்டிங் என திறமை வாய்ந்த பாகிஸ்தான் அணிக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்னையாக ஃபீல்டிங் உள்ளதாக பேசப்படுகிறது. ஃபிட்னஸ் சரியில்லாத காரணத்தினால் பல கோப்பைகளைவெல்ல முடியாமல் இருந்தாகவும் கூறப்படுகிறது.
இதனை சிலர் இணையத்தில் பாகிஸ்தானின் ஃபீல்டிங்கை “நெவர் எண்டிங் லவ் ஸ்டோரி” என கிண்டல் அடித்து வருகின்றனர். பாகிஸ்தான் அணியினர் சரியாக ஃபீல்டிங் செய்து, கேட்ச்சை சரியாக பிடித்திருந்தால் நியூசிலாந்தை 250 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருக்கலாம் என வர்ணனையாளர்கள் கூறியதும் கவனிக்கத்தக்கது.