For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியபோது மைதானம் நூலகம்போல் காட்சியளித்தது" - ஆஸி. வீரர் பாட் கம்மின்ஸ்

07:56 PM Nov 28, 2023 IST | Web Editor
 விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியபோது மைதானம் நூலகம்போல் காட்சியளித்தது    ஆஸி  வீரர் பாட் கம்மின்ஸ்
Advertisement

இந்திய வீரர் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியபோது கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் அமர்ந்திருந்த மைதானம் மயான அமைதியுள்ள நூலகம் போல காட்சியளித்தது என  ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement

கடந்த மாதம் தொடங்கிய உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஒரு வாரத்துக்கு முன்பு நிறைவு பெற்றது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6- வது முறையாக உலகக் கோப்பையை வென்றது. இறுதிப்போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், இறுதிப்போட்டியில் இந்திய அணியின் ரசிகர்களை அமைதியாக்குவதே எங்கள் இலக்கு எனக் கூறியிருந்தார். அவர் கூறியது போன்றேதனது அபார பந்துவீச்சின் மூலம் அதனை செய்தும் காட்டினார்.  அதேபோல பாட் கம்மின்ஸ் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தி ரசிகர்களை அமைதியாக்கினார் .

இந்த நிலையில், விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியபோது கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் அடங்கிய மைதானம் அமைதியான நூலகம் போல மாறியதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்  பேசியதாவது..

“ விராட் கோலியின் விக்கெட்டினை வீழ்த்திய பிறகு நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தோம். மைதானத்தில் ரசிகர்களை கவனியுங்கள் என்றார் ஸ்டீவ் ஸ்மித். நாங்கள் அந்த தருணத்தில் மைதானத்தில் உள்ள ரசிகர்களைக் கவனித்தோம். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் அடங்கிய மைதானம் மிகவும் அமைதியான நூலகம் போல மாறியது. ரசிகர்கள் மிகவும் அமைதியானார்கள். இந்த தருணத்தை நான் நீண்ட காலத்துக்கு நினைவில் வைத்திருப்பேன். அது மிகவும் சிறப்பான தருணம்” இவ்வாறு பாட் கமின்ஸ் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement