போலீசாரை அழைத்த பூச்சிகளின் சப்தம்!
சிக்காடா எனும் பூச்சி இனம் எழுப்பிய சப்தத்தினால் பொதுமக்கள் காவல்துறையினரை அழைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சிக்காடா எனப்படும் பூச்சியினங்கள் பல வருடங்கள் நிலத்திற்கு அடியில் இருக்கும். பின்னர் வெப்பநிலை காரணமாக பூமியின் மேற்பரப்புக்கு வரத்தொடங்கும். இந்த சிக்காடா இனங்கள் பெரும்பாலும் அமெரிக்காவில் காணப்படுகின்றன. இவை கூட்டமாக சேர்ந்து சத்தம் எழுப்பினால் அது ஜெட் என்ஜின்களில் வரும் சத்தம் போல இருக்கும் என கூறப்படுகிறது.
இவை பூமியில் இருந்து வெளியே வந்து மரங்களுக்கு அருகே முட்டையிட்டு தனது சந்ததியை பெருக்குகிறது. தென் கரோலினா மாகாணத்தில் வளர்ந்து வரும் சிக்காடாக்கள் மிகவும் சத்தமாக ஒலி எழுப்பியுள்ளன. இதனால் அந்த பகுதியில் வசிப்பவர்கள் காவல் துறையினரை தொடர்பு கொண்டு ஏன் சைரன்கள் அல்லது உரத்த கர்ஜனையை போன்ற சத்தங்கள எழுகின்றன என கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்து காவல் துறையினர் நேற்று பேஸ்புக்கில் ஒரு செய்தியை வெளியிட்டது. அதில், சைரன் அல்லது கர்ஜனையை போல் எள்ள சத்தங்கள் பூமிக்கு அடியில் இருந்த வந்த ஆண் சிக்காடாக்கள் துணையை ஈர்ப்பதற்காக எழுப்பும் ஒலி மட்டுமே என்று தெரிவித்தனர். சிலருக்கு இந்த சத்தம் எரிச்சலூட்டுவதாக இருந்தாலும், அவை மனிதர்களுக்கோ அல்லது செல்லப்பிராணிகளுக்கோ எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்று தெரிவிக்கப்பட்டது.
https://www.facebook.com/permalink.php?story_fbid=855616529940088&id=100064752458660&ref=embed_post