Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருமணத்தின் போது DJ ப்ளே செய்த பாடல்… மணமகன் செய்த அதிர்ச்சி செயல்!

திருமண விழாவில் டிஜே போட்ட பாடலால் மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
09:31 PM Apr 26, 2025 IST | Web Editor
திருமண விழாவில் டிஜே போட்ட பாடலால் மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Advertisement

பொதுவாக திருமண நிகழ்ச்சிகளில் சமீப காலமாக பாடல்கள் போடுவது, நடனம் ஆடுவது என கொண்டாடப்படுவது வழக்கம். அனைவரின் வாழ்விலும் மிகவும் மகிழ்ச்சியான நாளான திருமண நிகழ்ச்சியை சிறப்பிக்கும் வகையில் இவ்வாறு செய்யப்படுகிறது. ஆனால், டிஜேவின் ஒரு பாடலால் ஒரு திருமண கொண்டாட்டமே தலைகீழாக மாறி உள்ளது.

Advertisement

டெல்லியில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் டிஜே, ரன்வீர் கபூரின் ”சன்னா மெரேயா” என்ற பாடலை ப்ளே செய்தார். இந்த பாடலைக் கேட்ட மணமகனுக்கு அவரின் முன்னாள் காதலியின் நினைவுகள் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மணமகன் அந்த திருமணத்தை நிறுத்திவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினார். இந்த பதிவு இணையத்தில் வைரலானதையடுத்து பலரும் இதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“DJவின் ஒரு பாடலால் மணமகன் இவ்வளவு பாதிக்கப்படுவார் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது” என ஒருவர் தெரிவித்திருந்தார். மற்றொரு பயனர், “இதனால் மணமகளின் நிலைமை என்னவாகும்?” என சோகமாக கூறியிருந்தார். 'சன்னா மெரேயா' என்பது பாலிவுட் படமான 'ஏ தில் ஹை முஷ்கில்' படத்தில் இடம்பெற்றுள்ள பாடலாகும்.

Tags :
Channa MerayaDelhiDJGroomMarriagenews7 tamilNews7 Tamil UpdatessongWedding
Advertisement
Next Article