முகை மழை முகை மழை.. நான் நனைகிறேன் முதல்முறை - ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ முதல் பாடல் வெளியானது!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சசிகுமார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் நந்தன். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அதனைத் தொடர்ந்து, சசிகுமார் தற்போது “டூரிஸ்ட் ஃபேமிலி” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான அபிஷான் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். இதில் சசிகுமார் உடன் சிம்ரன், எம்.எஸ். பாஸ்கர், மிதுன் ஜெய் ஷங்கர், ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்திற்க்கு அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தை மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ளது.
படத்தின் டைட்டில், டீசர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான “முகை மழை” பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை ஷான் ரோல்டன் மற்றும் சைந்தவி இணைந்து பாடியுள்ளனர். மேலும் இப்படம் மார்ச் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.