For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வெளியானது ‘ஸ்டார்’ திரைப்படத்தின் 'மெலோடி' பாடல்!

08:45 PM Apr 20, 2024 IST | Web Editor
வெளியானது ‘ஸ்டார்’ திரைப்படத்தின்  மெலோடி  பாடல்
Advertisement

‘ஸ்டார்’ திரைப்படத்தின் 'மெலோடி' பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement

‘டாடா’ விற்கு பின் கவின் நடிக்கும் திரைப்படம் ‘ஸ்டார்’.  இந்த படத்தை 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி பிரபலமான இளன் இயக்கியுள்ளார்.  இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உட்பட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை பி.வி.எஸ்.என்.பிரசாத், ஶ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.  இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ஸ்டார் படத்தின் மேக்கிங் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.  இத்திரைப்படத்தின் விண்டேஜ் லவ் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  இப்படம் வரும் மே 10 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  இந்த நிலையில், இத்திரைப்படத்தில் 'மெலோடி' பாடல் வெளியாகியுள்ளது.  இப்பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ நேற்று வெளியிடப்பட்டது.  இப்பாடலின் வரிகளை படத்தின் இயக்குனரான இளன் எழுதியுள்ளார்.

Tags :
Advertisement