Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சரத்குமாரின் 'தி ஸ்மைல் மேன்' திரைப்படம் - ட்ரெய்லர் வெளியீடு!

08:29 PM Dec 23, 2024 IST | Web Editor
Advertisement

சரத்குமாரின் 150வது திரைப்படமான கிரைம் இன்வெஸ்டிகேசன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் 'தி ஸ்மைல் மேன்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

Advertisement

நடிகர் சரத்குமார், தன்னுடைய 150வது திரைப்படமாக 'தி ஸ்மைல் மேன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சிதம்பரம் நெடுமாறன் என்ற அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடித்துள்ளார். அவரது ஞாபகம் முழுமையாக அழிவதற்குள் அவர் தொடர் கொலைகள் செய்த ஒரு குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும். இதை மையமாக வைத்து படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் சரத்குமாருடன் சிஜா ரோஸ், இனியா, ஜார்ஜ் மரியன், சுரேஷ் மேனன், குமார் நடராஜன் மற்றும் ஆழியா ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் தொழில்நுட்பக் குழுவில் படத் தயாரிப்பாளர் விக்ரம் மோகன், இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ், எடிட்டர் சான் லோகேஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சலில் தாஸ், அனிஷ் ஹரிதாசன் மற்றும் ஆனந்தன் டி இப்படத்தை தயாரித்தனர்.

போர் தொழில், ஹிட் லிஸ்ட், நிறங்கள் மூன்று திரைப்படங்களை தொடர்ந்து மீண்டுமொரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரைம் இன்வெஸ்டிகேசன் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியிருக்கும் சியாம்-பிரவீன் இயக்கியுள்ள இப்படம் டிசம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படமானது சரத்குமாருக்கு ஹிட்டடிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது 'தி ஸ்மைல் மேன்-னின்' ட்ரெய்லர் யூடியூபில் வெளியாகியுள்ளது. மேலும், இந்த ட்ரெய்லர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
ActorSarathKumarTheSmileMan
Advertisement
Next Article