Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“இந்திய - சீன எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் நிலைமை பதற்றமாகவே உள்ளது" | ராணுவத் தலைமை தளபதி உபேந்திர திவேதி!

04:41 PM Oct 01, 2024 IST | Web Editor
Advertisement

இந்திய - சீன எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் நிலைமை "பதற்றமாகவே உள்ளது இயல்பாக இல்லை" என்று இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி உபேந்திர திவேதி கூறினார்.

Advertisement

டெல்லியில் பேசிய உபேந்திர திவேதி, ​தற்போதைய சூழ்நிலைகள் பதற்றமாக உள்ளது என்றும், மேலும் எந்தவொரு சூழலுக்கும் இந்தியா முழுமையாக தயாராக உள்ளது என்றும் கூறினார். மே 2020-இல் தொடங்கிய ராணுவ மோதலுக்கு முந்தைய நிலைமையை, அதாவது 2020க்கு முந்தைய நிலைக்கு மீட்டெடுப்பதே இந்தியாவின் நோக்கமாகும். இதில் குறிப்பாக தரை ஆக்கிரமிப்பு மீட்பு தொடர்பான முந்தைய நிலைமைகளுக்குத் திரும்புவது அடங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய ஜெனரல் திவேதி, "நிலைமை சீராக உள்ளது, ஆனால் அது இயல்பாக இல்லை. ஏப்ரல் 2020க்கு முன்பு இருந்த நிலைமையை மீட்டெடுக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்." இந்த மறுசீரமைப்பு நடக்கும் வரை, நிலைமை தொடர்ந்து பதட்டமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

கடந்த வாரம், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பெசுகையில், எல்லையில் நிலவும் சூழ்நிலைக்கு தீர்வு காணும் வரை இயல்பு நிலையை அடைய முடியாது என்று கூறினார்.கிழக்கு லடாக்கில் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகளை சரி செய்யும் முயற்சியில், இந்தியாவும் சீனாவும் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இரண்டு சுற்று ராஜதந்திர விவாதங்களை நடத்தின. இதே போன்று கடந்த 2020 முதல் இந்தியாவும் சீனாவும் பல சுற்று ராணுவ மற்றும் ராஜதந்திர உரையாடல்களை நடத்தியுள்ளன, இதன் விளைவாக பல பிரச்னைகள் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், எல்லைப் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு காண்பது இதுவரை கைகூடவில்லை.

கடந்த மாதம், பிரிக்ஸ் மாநாட்டின் போது, ​​தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யியை சந்தித்தார். இரு தரப்பினரும் "அவசரத்துடன்" செயல்படவும், கிழக்கு லடாக்கில் மீதமுள்ள பிரச்னைக்குரிய விவகாரங்களில் விரைந்து இரட்டிப்பு வேகத்தில் தீர்வு காண ஒத்துழைப்பது எனவும் ஒப்புக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது.

Tags :
Ajit Dovalarmy chiefchinaChina borderCompeteJaishankarLadakh bordering Chinanews7 tamilnot normalsensitivestableUpendra Dwivedi
Advertisement
Next Article