எல்.ஐ.கே படத்தின் 2வது பாடல் இன்று மாலை வெளியீடு...!
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி திரைப்படம் மூலமாக இயக்குநராக நுழைந்த பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகனார். அப்படம் 100 கோடி ரூபாய் வசூலித்து அனைவரின் புருவங்களையும் உயர்த்தியது. இதனை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியனா டிராகன் மற்றும் டுயூட் ஆகிய படங்கள் அடுத்தடுத்து 100 கோடி கிளப்பில் சேர்ந்து பிரதீப்புக்கு ஹாட்ரிக் வெற்றியை அளித்துள்ளது.
இதனை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில்நடித்துள்ள எல்.ஐ.கே (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) படத்தில் நடித்துள்ளார். நயன்தாரா மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் கீருத்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானும் நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
எல்.ஐ.கே திரைப்படம் அடுத்த மாதம் 18-ந்தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில்,இப்படத்தின் 2வது பாடலான 'பட்டுமா' இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. முன்னதாக இப்பாடலின் ப்ரோமோவை நேற்று படக்குழு வெளியிட்டிருந்தனர்.