வெளியானது 'இரண்டு வானம்' படத்தின் செகண்ட் லுக்!
‘முண்டாசுப்பட்டி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ராம்குமார், அதற்கடுத்து ‘ராட்சசன்’ என்கிற படத்தை இயக்கி அனைவராலும் கவனிக்கப்பட்டார். மேலும், இப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இவரது அடுத்த படம் பற்றிய அப்டேட்டுகள் எதுவும் வராமலே இருந்தது. இந்த சூழலில், மீண்டும் விஷ்ணு விஷாலுடன் இவர் இணையும் புதிய படம் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது.
அதன்படி, ராம்குமாரின் அடுத்த படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கிறார். பிரேமலு படத்தின் மூலம் பரவலாக கவனமீர்த்த மமிதா பைஜூ இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். சித்தா படத்திற்கு இசையமைத்த திபு நினன் தாமஸ் படத்திற்கு இசையமைக்கிறார்.
#IranduVaanam - Irandaam poster 💚@SathyaJyothi @_mamithabaiju @dir_ramkumar @dhibuofficial @arjun1on @dinesh_k_babu @sanlokesh @artdirectorgopi @ParthiSnathan @sureshchandra @abdulnassaroffl @donechannel1 @vinciraj @saregamasouth_ pic.twitter.com/sXsxDPoOhL
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) March 16, 2025
இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இந்த படத்திற்கு ‘இரண்டு வானம்’ என பெயரிடப்பட்டுள்ளது. காமெடி, காதல், த்ரில்லர் என 3 ஜானரில் இப்படம் உருவாகி வருவதாக விஷ்ணு விஷால் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.