டெல்லியில் கொளுத்திய வெயில்... தொழிலாளர்களுக்கு மோர் பாக்கெட்டுகளை வழங்கிய பெண் - குவியும் பாராட்டு!
டெல்லியில் கடும் வெயிலில் உழைக்கும் தொழிலாளர்களுக்கு பெண் ஒருவர் மோர் பாக்கெட்டுகளை வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கிறது. குறிப்பாக, நாட்டின் வட மாநிலங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. கோடை வெயிலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ஒடிசா போன்ற பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெல்லி உட்பட வட மாநிலங்களில் 45 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தண்ணீர் தட்டுப்பாடும், மின்வெட்டு பாதிப்பும் பல இடங்களில் ஏற்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : “அண்ணனுக்கும் பிறந்தநாள்... தம்பிக்கும் பிறந்தநாள்... மகிழ்வான தருணம் இது” - நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து!
டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் 52.3 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, டெல்லியில் வெயிலுக்கு மத்தியில் உழைத்து வரும் தொழிலாளர்களுக்கும், மக்களுக்கும் For A Cause என்ற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சுசிசர்மா, அவர்களது தாகத்தை தணிக்கும் வகையிலும், வெப்பத்திலிருந்து காத்துக்கொள்ளும் வகையிலும் மோர் பாக்கெட்டுகளை வழங்கினார். இதற்காக சுசிசர்மாவுக்கு அனைவரும் தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.
மேலும், இது தொடர்பான வீடியோ ஒன்றையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்த சுசிசர்மா, இதுபோன்று தொடர்ந்து உதவ நன்கொடை அளிக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் சுசிசர்மாவின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.