கார்த்திகை மாத மண்டல பூஜை - சபரிமலை நடை திறப்பு!
மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.
கார்த்திகை மாதம் தொடங்கி, மகரஜோதி வரை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டுக்கான மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நடை இன்று (நவ.15ம்தேதி) திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : உசிலம்பட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் கொண்டாடிய தேசிய பத்திரிக்கையாளர் தின விழா!
முதல் நாளிலேயே சாமி தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பம்பையில் முகாமிட்டுள்ளனர். நாளை நவ.16ம் தேதி மண்டல பூஜை வழிபாடுகள் விமர்சையாக துவங்கி நடைபெற உள்ளது.
டிசம்பர் 26ம்தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14ம்தேதி மகரவிளக்கு பூஜை யும் நடைபெறுகிறது. இதற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகளை திருவாங்கூர் தேவசம்போர்டு கேரள அரசு விரிவாக செய்துள்ளது.