Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“எனது வெற்றிக்கு தமிழ்நாடு அரசின் பங்கு முக்கிய காரணம்” - உலக செஸ் சாம்பியன் குகேஷ்!

09:06 PM Dec 17, 2024 IST | Web Editor
Advertisement

“என்னுடைய வெற்றிக்கு தமிழ்நாடு அரசின் பங்கு மிக முக்கியமானது” என உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷ் தெரிவித்துள்ளார்.

Advertisement

உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு தமிழ்நாடு அரசு சார்பில், சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

விழாவில் உலக செஸ் சாம்பியன்ஷிப் கோப்பையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் கொடுத்து குகேஷ் வாழ்த்து பெற்றார். பின்னர் பேசிய அவர்,

“இளம் செஸ் சாம்பியனாக வெற்றி பெற வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறியுள்ளது. தமிழ்நாடு அரசின் நிதியுதவி எனது வெற்றி பயணத்துக்கு உறுதுணையாக இருந்தது. வெற்றியுடன் திரும்பும் போதெல்லாம் முதலமைச்சர் வாழ்த்துவது மகிழ்ச்சி தருகிறது. என்னுடைய வெற்றிக்கு தமிழ்நாடு அரசின் பங்கு மிக முக்கியமானது. செஸ் விளையாட்டின் முன்னேற்றத்துக்கு தமிழ்நாடு அரசு அளப்பரிய பணியாற்றுகிறது” என்று தெரிவித்தார்.

Tags :
GukeshMK StalinTN GovtWorld Chess Champion
Advertisement
Next Article