For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கேமிங் துறையில் AI-தொழில்நுட்பத்தின் பங்கு!

12:20 PM Apr 01, 2024 IST | Web Editor
கேமிங் துறையில் ai தொழில்நுட்பத்தின் பங்கு
Advertisement

உலக அளவில் பரவலாக பயன்படுத்தப்படுகிற செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பம் கேமிங்க் துறையில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து விரிவாக காணலாம்.

Advertisement

2020-க்கு பிந்தைய காலம் என்பது முற்றிலுமாக AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப காலம் தான்.  பள்ளிக் கூடங்களில் ஆசிரியராக,  செய்தி நிறுவனங்களில் செய்தி வாசிப்பாளராக,  மறைந்தவர்களின் குரலை மீட்டெடுக்க,  கடினமான தேர்வுகளில் தேர்ச்சி பெற என செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்திய ஆச்சர்யத்தக்க செய்திகள் கடந்த வருடம் முழுக்க செய்திகளில் ஆக்கிரமித்துக் கொண்டன.   செயற்கை நுண்ணறிவு (AI) பல்வேறு அம்சங்களை முற்றிலும் மாற்றி வடிவமைக்கும் ஆற்றலைக் கொண்ட ஒரு சிறப்பான தொழில்நுட்பமாகும்.  இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி  பல்வேறு துறைகளில் அதிவேகமாக நடந்து வருகிறது.  இந்த தொழில்நுட்பத்தால் மனிதர்களை போல சிந்திக்கவும்,  பகுப்பாய்வு செய்யவும் மற்றும் செயல்படவும் முடியும் என கூறப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சமீபத்தில் வெளியான சாட்ஜிபிடி மற்றும் OpenAI போன்ற தொழில்நுட்பங்கள் நமது தேவையை விரைவில் அடையவும்,  தேடலை விரிவுபடுத்தும் விதமாகவும் அமைந்தது.  அலுவல் சார்ந்த பணிகள் முதல் சாதரண அன்றாட நிகழ்வுகளை குறித்த பரிந்துரைகளை பெறுவதற்கு கூட இந்த செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கல்வி,  ஆராய்ச்சி,  சினிமா,  ஊடகம்,  தகவல் தொழில்நுட்பம் ,  வியாபாரம் போன்ற பல துறைகளில் செயற்கை நுண்ணறிவின் தேவைகள் இருப்பது போலவே இந்த தொழில்நுட்பம் கேமிங் துறைகளிலும் குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்பை வழங்கி வருகிறது.

கேமிங் துறையில் AI -ன் ஆரம்பம்

சாதரணமாக ஐஃபோன் பயனாளர்கள் பயன்படுத்தும்  “சிரி” ,  அமேசானின் அலெக்ஸா போன்றவை மனிதர்களின் கட்டளைக்கு ஏற்ப செயல்படும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.  அதேபோல மொபைல் போன்கள் பயன்படுத்தும் பலரும் ஏற்கெனவே செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினை ஓரளவுக்கு பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

மற்ற துறைகளை போலவே கேமிங் துறையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உள்வாங்கி செயல்பட்டு வருகின்றன.  கேமிங் தொழில்நுட்பத்தில் AIன் பங்களிப்பு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.  உலகளாவிய அளவில் கேமிங் தொழில் இப்போது மிகவும் பிரபலமான மற்றும் இலாபகரமான பொழுதுபோக்குத் தொழில்களில் ஒன்றாக உள்ளது.

வீடியோ கேமிங்கின் வரலாற்றில்,  செயற்கை நுண்ணறிவு கணிசமான பங்கைக் கொண்டுள்ளது.  சாதரண கேம்கள் முதல் ஆன்லைன் கேசினோக்கள் வரை AI தொழில்நுட்பம் செயல்படுத்துவதன் மூலம் அதன் Features மேம்படுத்தப்பட்டுள்ளன.  செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் தொழில்நுட்பம் மேம்பட்டதால், ரேண்டமைசேஷன் மற்றும் நியூரல் நெட்வொர்க்குகள் போன்றவை செயல்பாட்டுக்கு வந்துள்ளன.  அவை யதார்த்தமான மற்றும்  திரில்லிங்கான கேமிங் அனுபவங்களை கொடுக்கின்றன.

உதாரணமாக ஆன்லைன் கேசினோ கேமிங்கின் வளர்ச்சியானது தொழில்துறையை பன்முகப்படுத்த உதவியுள்ளதாக சொல்லப்படுகிறது.  இதன் மூலம் புதிய
பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கப்படுகிறது.  அதேபோல விளையாடுபவர்களின் பரந்த மக்கள்தொகையை இத்துறையை நோக்கி எளிதில் அணுகக்கூடியதாக மாற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவுகிறது.

இவ்வளவு சாதகங்கள் இருந்தாலும்  டிஜிட்டல் சாம்ராஜ்யத்தில் கேமிங் துறைக்கு சில  சவால்கள் இல்லாமல் இல்லை.  விர்ச்சுவல் கேமிங் உலகில் விளையாடப்படும் ஆன்லைன் கேசினோ விளையாட்டுகளில்  க்ரூப்பியர்கள் மற்றும் பாதுகாப்புக் காவலர்கள் இல்லாததால் ரேண்டம் எண் உருவாக்குதல் போன்றவை கணினிமயமாக்கட்டுள்ளன. PokerStars Casino போன்ற ஆபரேட்டர்கள் RNG களை செயல்படுத்தி தங்கள் விரிவான கேமிங்கை உருவாக்கியுள்ளன.  இருந்தபோதிலும் AI மற்றும் சாட்போட்கள் பயன்படுத்தி வாடிக்கையாளர் சரிபார்ப்பு முறைகளை கையாள முடியும்.

குறிப்பாக,  கேமிங்கை உருவாக்கும் ஸ்டுடியோக்கள் AI அல்காரிதம்களைப் பயன்படுத்தி, அதன்  உள்ளடக்கத்தை உருவாக்குகின்றன . இதன் மூலம் பெருமளவு மனிதர்களின் பணிச் சுமை குறைக்கப்படுகிறது.

Tags :
Advertisement