“வெப் சீரிஸால் சினிமா துறை பின்னோக்கி செல்கிறது என்பது தவறானது!” - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
வெப் சீரிஸால் சினிமா துறை பின்னோக்கி செல்கிறது என்ற தகவல் பொய்யானது என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.
சென்னை தாம்பரத்தை அடுத்த செம்பாக்கம் பகுதியில் புதிய வெள்ளி நகை கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த வெள்ளி நகை கடையை சிறப்பு விருந்தினராக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் வருகை குறித்து தெரிந்தவுடன் அவரது ரசிகர்கள் கடை முன்பு கூடி செல்பி எடுக்க முண்டியடித்தனர்.
பின்னர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயர் வைப்பது பொது கருத்தாக இருந்தால் அது தவறில்லை, அனைத்து நடிகர்களின் கருத்துதான் எனது கருத்து.
வெப் சீரிஸால் சினிமா துறை பின்னோக்கி செல்கிறது என்ற தகவல் பொய்யானது சினிமா எப்போதும் மங்கிபோகாது.
இவ்வாறு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசினார்.