For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தள்ளிப் போகிறதா 'வணங்கான்' திரைப்படத்தின் ரிலீஸ்?

03:26 PM Jun 13, 2024 IST | Web Editor
தள்ளிப் போகிறதா  வணங்கான்  திரைப்படத்தின் ரிலீஸ்
Advertisement
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள 'வணங்கான்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சேது,  நந்தா,  பிதாமகன்,  நான் கடவுள்,  அவன் இவன் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய பாலா தற்போது ‘வணங்கான்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.  அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில்,  ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார்.  மேலும்,  சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisement

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் பி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.  படப்பிடிப்பு கன்னியாகுமரி,  திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றது.  இந்த திரைப்படத்தின் போஸ்டர்,  டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதையும் படியுங்கள் : “இவரின் பேட்டிங் வெறுப்பூட்டியது” – தோல்வி குறித்து பேசிய கேன் வில்லியம்சன்!

தற்போது படப்பிடிப்பு முடிந்து படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் படம் வரும் ஜூலை மாதம் திரைக்கு வர உள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்திருந்தார்.

ஆனால்,  தற்போது இந்த திரைப்படத்தை ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. புஷ்பா 2 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்பட்டதால் அந்த நாளில் சில படங்கள் வெளியாக உள்ளன.

Tags :
Advertisement