For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'இந்தியன் 2' திரைப்படம் எப்போது ரிலீஸ்? தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

06:45 PM Apr 06, 2024 IST | Web Editor
 இந்தியன் 2  திரைப்படம் எப்போது ரிலீஸ்  தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு
Advertisement

'இந்தியன் 2' திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement

இயக்குநர் ஷங்கர் உடன் கமல்ஹாசன் இரண்டாம் முறையாக இணைந்த திரைப்படம் ‘இந்தியன் 2’.  1996ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகம் பாக்ஸ் ஆஃபிஸில் சக்கை போடு போட்டதுடன்,  வசூலையும் குவித்து தமிழ் சினிமாவின் பிரபல கமர்ஷியல் படமாக உருவெடுத்தது.  கமல்ஹாசன் இப்படத்துக்காக தேசிய விருது வென்றார்.

இதனைத் தொடர்ந்து,  இயக்குநர் ஷங்கர் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கியுள்ளார்.  இத்திரைப்படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி,  பாபி சிம்ஹா,  காஜல் அகர்வால்,  சித்தார்த்,  ராகுல் பிரீத் சிங்,  பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.   இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

அண்மையில்,  இந்தியன் 2 திரைப்படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது.  படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில், 'இந்தியன் 2' திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Tags :
Advertisement