கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்திக். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'மெய்யழகன்' திரைப்படம் திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ஓடிடி ரிலீஸில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இவரின் 26-ஆவது படத்தை நலன் குமாரசாமி இயக்கியுள்ளார். சூது கவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற வெற்றி படங்களை நலன் குமாரசாமி இயக்கியுள்ளார்.
‘வா வாத்தியார்’ என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வா வாத்தியார் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர், பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் டிச.5ஆம் தேதி வெளியாகிறது.