சம்பவம் செய்த 'ரெட் டிராகன்' ... 2 கோடி பார்வைகளை கடந்த 'குட் பேட் அக்லி' டீசர்!
கடந்த 1990 ம் ஆண்டு ‘என் வீடு என் கணவர்’ என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகர் அஜித். இப்படத்தில் அவர் பள்ளி மாணவராக நடித்திருந்தார். பின்னர் 1993 ல் வெளியான அமராவதி திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகராக அறிமுகமானார். இதனையடுத்து காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, வலிமை என பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.இவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் உருவான ‘விடாமுயற்சி’ திரைப்படம் கடந்த பிப்.6ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து அஜித் நடித்துள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. விடா முயற்சி படத்திற்கு பிறகு திரிஷா மீண்டும் அஜித் குமாருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
Adhuuuuuuuuuuuuu 🔥🔥🔥🔥 https://t.co/LOwrz6MteW
— G.V.Prakash Kumar (@gvprakash) February 28, 2025
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் பிரசன்னா, சுனில், அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மைத்திரி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக், திரிஷாவின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியாகி கவனம் பெற்றது. அதன்படி திரிஷா இப்படத்தில் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் படத்தின் டீசர் நேற்று வெளியானது. இந்த நிலையில், இப்படத்தின் டீசர் யூடியூபில் 2 கோடி பார்வைகளைக் கடந்து ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.