For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததற்கு காரணம் மக்களிடம் பயமில்லை " - அன்புமணி ராமதாஸ் பேட்டி !

பெண்களுக்கு ஏன் பாதுகாப்பு இல்லாத சூழல் என்றால், மக்களிடத்தில் பயமில்லாததே காரணம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
02:50 PM Mar 02, 2025 IST | Web Editor
 பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததற்கு காரணம் மக்களிடம் பயமில்லை     அன்புமணி ராமதாஸ் பேட்டி
Advertisement

கோவை விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,

Advertisement

"தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. பெண்கள் பகலில் வெளியில் நடமாடுவதற்கு அச்சமடைகிறார்கள். தருபுரியில் திமுக மாவட்ட செயலாளர் ஒரு ஐஏஎஸ் படித்த அதிகாரியை மிரட்டுகிறார் என்றால் இதுதான் திமுக, முதலமைச்சர் சொல்லி தான் கூறுவதாக மாவட்ட செயலாளர் கூறுகிறார். அவர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

ஒரு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ்ஐ கேவலப்படுத்துகிற மாவட்ட செயலாளர் மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. தெலுங்கானா, பீகார் போன்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இருக்கின்றன. தமிழ்நாட்டின் முதலமைச்சர் மட்டும் எங்களுக்கு சாதிவாரிக் கணக்கு நடத்த அதிகாரம் இல்லை என எந்த அடிப்படையில் கூறுகிறார்.

உண்மையான சமூக நீதி, அக்கறை முதலமைச்சர் என்ன செய்திருப்பார். சமூக, பொருளாதார, தொழில் முன்னேற்றம் இருக்கிறதா என தெரிந்து கொள்ளாதா முதலமைச்சர் அதிகாரம் இல்லை என்றாலும் கூட எனக்கு அதிகாரம் இருக்கிறது என அதை நிறைவேற்றுவது தான் வீரன். முதலமைச்சருக்கு தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதல்வர் கூட்டத்தில் பாமக கலந்து கொள்ளும். குடும்ப கட்டுப்பாடு சரியாக செய்தால் தமிழ்நாடு மற்றும் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்திருக்கிறது.

அமித்ஷா தமிழ்நாட்டிலும் மற்ற மாநிலங்களில் தொகுதிகளை குறைக்க மாட்டோம் என கூறினாரே தவிர எத்தனை தொகுதிகள் அதிகப்படுத்துவோம் என கூறவில்லை. பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் தொகை மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது. தொகுதிகளை உயர்த்தினால் எல்லா மாநிலங்களுக்கும் ஒரே மாதிரி உயர்ந்துங்கள். தர்மேந்திர பிரசாத், கல்வி கொள்கையை நிறைவேற்றவில்லை என்றால் கல்வி நிதியை வழங்க மாட்டோம் என கூறியது மிக மிக தவறானது.

தமிழ்நாடு இந்தியாவின் வளர்ந்த மாநிலமாக இருக்கிறது. இருமொழியை கொள்கை வைத்து வளர்ந்த மாநிலமாக இருக்கிறது. முதலமைச்சர் ஹிந்தி திணிப்பே வேண்டாம் என கூறுகிறீர்கள், தமிழுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள். தாய் மொழியில் பட்டம் வாங்க முடியாது. தமிழ் தமிழ் என பேசுகிறீர்கள். தமிழுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?

நான் முதலமைச்சராக இருந்தால் உன்னுடைய 2500 கோடி வேண்டாம் என கூறியிருப்பேன். கல்வி என்பது இன்றைக்கு வியாபாரமாகிவிட்டது. அதற்கு காரணம் இந்த இரண்டு கட்சிகள் தான். இந்தி கற்றுக்கொள்வது தவறில்லை. திணிப்பது என்பது வேறு. ஏன் ஜெர்மன், பிரெஞ்ச் கற்றுக் கொள்ளக் கூடாதா ? பீகாரில் தமிழ் கற்றுக் கொள்கிறார்களா? அங்கே இருமொழிக் கொள்கை. நமக்கு கொள்கையா?

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளையும் அரசுடைமை ஆக்குவீர்களா? கல்வி என்பது சேவை ! உங்கள் கொள்கையை ஏற்று கொண்டால் தான் பணம் கொடுப்பீர்களா? இல்லையென்றால் பணம் தரமாட்டீர்களா? ஏழை பிள்ளைகள் படிக்க கூடாதா? தொகுதி 30% உயர்த்தினால் அனைத்து மாநிலங்களிலும் உயர்த்த வேண்டும். பாமகவின் நிலைப்பாடு ஒருமுறை கொள்கை தான்.

ஆனால் தமிழகத்தில் இப்படி ஒரு ஆட்சி நடக்கிறது. பெண்களுக்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பு இல்லாத சூழல் என்றால், மக்களிடத்தில் பயமில்லாத சூழல். காவல்துறை நினைத்தால் அந்த பயத்தை உண்டாக்கலாம். தமிழ்நாடு காவல்துறை குற்றம் செய்பவர்களை பாதுகாக்கிறீர்கள் வழக்கு போடுபவர்கள் மீது வழக்கு போடுகிறீர்கள்". இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement