For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார்" - திருமாவளவன் பேச்சு!

08:03 PM Jun 15, 2024 IST | Web Editor
 விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார்    திருமாவளவன் பேச்சு
Advertisement

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார் என கோவையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

Advertisement

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, 40 தொகுதிகளிலும் வெற்றி அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, மக்களவைத் தேர்தல் உட்பட தொடர்ந்து வெற்றிகளை பெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா என முப்பெரும் விழா கோவை கொடிசியா மைதானத்தில் இன்று (ஜூன் 15) நடைபெற்றது.

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக முதன்மை பொதுச்செயலாளர் துரை வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள் : “நீட் தேர்வு முறைகேடானது” – அனிதாவின் மதிப்பெண் சான்றிதழைப் பகிர்ந்து கேரள காங்கிரஸ் கண்டனம்!

இந்த விழா மேடையில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது,

தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்கள் என அனைத்திலும் அடுத்தடுத்து வெற்றியைச் சந்தித்துள்ளது திமுக. இப்பொழுது நடந்து முடிந்திருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி நூற்றுக்கு நூறு வெற்றி பெற்றுள்ளது. திமுக செப்டம்பர் மாதத்தில் முப்பெரும் திருவிழா கொண்டாடுவது வழக்கம். செப்டம்பர் மாதத்தில் நடைபெறவிருந்த விழா இதுவா என தோன்றுகிறது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி விட்டு சென்ற பணிகளை நாடே வியந்து பார்க்கும் வகையில் செய்து முடிக்கும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாராட்டு விழா இது. தமிழ்நாட்டில் INDIA கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வியூகம்தான். சோனியா காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களை இங்கே அழைத்து வந்து அவருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்.

கோவையில் திமுக பெற்ற வெற்றி மதவெறி அரசியலுக்கு, சிறுபான்மை வெறுப்பு அரசியலுக்கு இடம் இல்லை என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர். இந்தியா கூட்டணி பெற்றது தோல்வில்ல தோல்வியில் மாபெரும் வெற்றி. பாஜக பெற்றது வெற்றி அல்ல, வெற்றி பெற்றதைப் போல மாபெரும் தோல்வி

தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அரசியல் வரலாற்றில் இவ்வாறு தொடர் வெற்றியை பெற்ற கட்சியே கிடையாது. டெல்டா விவசாயிகளின் நலனுக்காக உருவானது INDIA கூட்டணி. விக்கிரவாண்டியில் போட்டி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார். விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
Advertisement