”கரூர் துயர சம்பவத்திற்கு காவல்துறையின் செயல்பாடு இல்லாததே காரணம்”-ஆர்.பி. உதயக்குமார்..!
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
”ஜனநாயக நாட்டில் கருத்து சொல்வதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. டிடிவி தினகரன் எப்போது பார்த்தாலும் எடப்பாடி பழனிசாமியை விமர்சிப்பதை வேலையாக வைத்துள்ளார். திமுகவை புகழ்ந்து பேசிவிட்டு அதிமுக பற்றி பேசுவது ஏற்புடையதல்ல. டிடிவி தினகரனை தன்னை நம்பி வந்தவர்களை நட்டாத்தில் விட்டு விட்டார். கரூர் துயர சம்பவத்திற்கு ஒரு காவல் அதிகாரி மீது கூட நடவடிக்கை எடுக்கவில்லை? ஏன் சி பி ஐ க்கு உத்தரவிடவில்லை. உண்மையை சொல்ல வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.
விஜய் மீது ஏன் வழங்கு பதிவு செய்யவில்லை கைது செய்யவில்லை என திருமாவளவன் கேட்டது நியாயமான கேள்வி? இது குறித்து திமுக தலைவரிடம் தான் கேட்க வேண்டும் . திமுக குடும்ப கட்சியாக மாறிய ரொம்ப நாள் ஆகிவிட்டது. இன்று விளம்பர வெளிச்சத்தில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் நடந்த துயரச் சம்பவத்திற்கு முதலில் வழி காட்ட வேண்டும். அதன் பிறகு தான் முதல்வர் இந்தியாவிற்கு வழி காட்ட வேண்டும். காவல்துறையின் செயல்பாடு இல்லாததே கரூர் துயர சம்பவத்திற்கு காரணம்” என்று தெரிவித்தார்.