For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வெளியானது பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல்!... செங்கல்பட்டு மாணவி முதலிடம்...

10:49 AM Jul 10, 2024 IST | Web Editor
வெளியானது பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல்     செங்கல்பட்டு மாணவி முதலிடம்
Advertisement

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்பக் கல்வி ஆணையர் வீரராகவ ராவ் வெளியிட்டுள்ளார்.  

Advertisement

தமிழகத்தில் 2024-25 ஆம் ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு 2,53,954 பேர் விண்ணப்பித்தனர். இதில் 2,09,645 பேர் கட்டணம் செலுத்தி இருந்த நிலையில், 1,93,853 பேர்‌ சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்திருந்தனர்.

இந்நிலையில் கட்டணம் செலுத்தி சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்தவர்களுக்கு இன்று தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. இதனை உதொழில்நுட்பக் கல்வி ஆணையர் வீரராகவ ராவ் வெளியிடுகிறார்.செங்கல்பட்டு மாணவி தோஷிதா முதலிடம் பெற்றுள்ளார். நெல்லையை சேர்ந்த மாணவி நிலஞ்சனா 2-வது இடம் பெற்றுள்ளார். முதல் 2 இடங்களை மாணவிகள் பெற்ற நிலையில் நாமக்கலை சேர்ந்த கோகுல் என்ற மாணவன் 3-வது இடம்பெற்றுள்ளார். வரும் 22-ந்தேதி பொறியியல் கலந்தாய்வு தொடங்குகிறது.

இன்று காலை 10:30 மணிக்கு பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியான நிலையில், இதனை tneaonline.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த இணையதளத்தில் உங்களுடைய விவரங்களை பதிவு செய்து தரவரிசை பட்டியலை தெரிந்து கொள்ளலாம்.

Tags :
Advertisement