Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“இரண்டாவது இடத்திற்கு போட்டி நடந்து வருகிறது” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு!

“இரண்டாவது இடத்திற்கு போட்டி நடந்து வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
07:23 PM Mar 29, 2025 IST | Web Editor
Advertisement

சென்னை கொளத்தூரில் திமுக சார்பில் நடைபெறும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நோன்பு திறந்து சிறப்புரையாற்றினார். 

Advertisement

அவர் பேசியதாவது,  “நல்லிணக்கத்தை விரும்புகிற இஸ்லாமிய சகோதரர்களையும் திமுக-வையும் பிரிக்க முடியாது. அதனால்தான் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இது போன்ற விழாக்களை பலறும் நடத்துவார்கள், ஆனால் இஸ்லாமியர்களுக்கு தீங்கு நடக்கும்போது வாய் திறக்க மாட்டார்கள். குடியுரிமை திருத்த சட்டம் சரி  சிறுபான்மையினருக்கு எதிரான செயல்களில் முதல் எதிர்ப்பு குரல் கொடுப்பது திமுக தான். வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்திற்கு  எதிராக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நாடாளுமன்றத்திலும் , நாடாளுமன்ற கூட்டக்குழுவிலும், திமுக சார்பில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.

இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் இந்த சட்ட திருத்தத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றி, நம் அரசின் நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துள்ளோம். இந்த தீர்மானத்தை தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்திய மற்றும் உலக அளவில் இருக்ககூடிய இஸ்லாமிய அமைப்புகள் அதை பாராட்டி கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்த தீர்மானத்திற்கு எதிர்க் கட்சித் தலைவர் பங்கேற்கவில்லை. ஏனென்று உங்களுக்கே தெரியும். இரவோடு இரவாக அவர் விமானத்தை பிடித்து டெல்லிக்கு போனார். அங்கு நான்கு காரில் மாறி மாறி  போயிருக்கிறார். அப்படி சென்று இந்த சட்டத்தை கொண்டுவரப்போகிற அமித் ஷாவை சந்தித்திருக்கிறார். இந்த தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டுவரப் போகிறோம் என்று தெரிந்தும் அவர் வரவில்லை.

இன்றைக்கு பிரதான கட்சி திமுக தான். வேடிக்கை என்னவென்றால் எதிர்க் கட்சி தலைவர் அடுத்து நாங்கள்தான் ஆளும் கட்சி என்று சொல்லிக்கொண்டிருந்தார். இப்போது  நாங்கள்தான் எதிர்க் கட்சி என்று சொல்லுகிறார். அந்த நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். இதில் 2வது இடத்திற்கு அவர்களுக்குள் போட்டி நடந்து வருகிறது. ஏற்கெனவே எதிர்க் கட்சியினரை சிறுபான்மையினர் முற்றிலும் புறக்கணித்து வந்தார்கள்.

இப்போது எதிர்க் கட்சியினர் என்ன செய்வது என்று முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார்கள். சட்டமன்றத்தில் நான் அவர் டெல்லிக்கு போனதைப் பற்றி பேசினேன். கூட்டணி குறித்து அவர் பேசுவது அவர்கள் பிரச்னை, ஆனால் இருமொழி கொள்கை குறித்து பேசிவிட்டு வாங்கள் என்று சொன்னேன். அவர் அங்கு சந்தித்து பேசிவிட்டு, இருமொழி கொள்கை குறித்து அழுத்தமாக பேசிதாக சொன்னார். தமிழ்நாட்டு மக்கள் சார்பில் நான் அவருக்கு நன்றி சொல்கிறேன்.

அதே போல் வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக அவர் பேச  வேண்டும். அபோதும் கார் மாறி மாறி போய் பேசுங்கள் என்றேன். அதை அவை குறிப்பில் இருந்து அதிமுகவினர் நீக்கச் சொன்னார்கள். புண்படுத்தி இருந்தால் நீக்கிவிடுங்கள் என்று நானும் சொன்னேன். எதற்காக இதை சொல்கிறேன் என்றால், இப்படி பயந்து அஞ்சி நடுக்கும் செயலைத்தான் எதிர்க் கட்சி இன்று செய்து வருகிறது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதை திமுக எதிர்க்கும்”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags :
ADMKDMKIftar partyMKStalinRamadan 2025tvk
Advertisement
Next Article