For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“HMPV தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்!

12:41 PM Jan 07, 2025 IST | Web Editor
“hmpv தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை”   அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவுறுத்தல்
Advertisement

HMPV தொற்று குறித்து பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும், பொது வெளியில் செல்லும் பொழுது முக கவசம் அணிய வேண்டும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Advertisement

HMPV தொடர்பாக தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,

“இந்த வைரஸ் பரவியது முதல் தமிழகத்தின் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மத்திய மருத்துவத்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார்கள். பல்வேறு மாநிலங்களில் இருந்து வரக்கூடியவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். விமான நிலையங்களில் இது போன்ற கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அவசர காலம் ஏதேனும் இருந்தால் WHO அறிவிப்பார்கள். இதுகுறித்து who சார்பில் அறிவிப்பு வெளியிடப்படும். அதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்படும். 15 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த வைரஸ் தோன்றியது. 2001ல் இந்த வைரஸ் உருவானது. இந்த பாதிப்பு இருந்தால் 2 முதல் 3 நாட்களுக்கு இரும்ல் சளி பாதிப்பு இருக்கும். உடல் நலக்குறைவு இருப்பவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும்.

முகக்கவசம் அணிவது, இடைவெளி பின்பற்றுவது தொடர்ந்து இருந்து வருகிறது. கொரோனா தொற்றுக்குப் பிறகு பல்வேறு வைரஸ் தோன்றியது. இந்த வைரஸ் பொருத்தவரை 2 நாட்களுக்குப் பிறகு அதுவே நீங்கிவிடும். இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் பெருமளவு சிகிச்சை மேற்கொள்ள தேவையில்லை. வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் தனிமைப்படுத்துவது சிகிச்சை தான்.

சேலத்தில் மற்றும் சென்னையில் இருவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது சேலத்தில் 65 வயதுமிக்க ஒரு நபருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு பல்வேறு உடல் நலக் குறைவு காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 45 வயது நபருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது அவருக்கும் இது போன்ற உடல்நல குறைவு உள்ளது. தமிழகத்தில் இந்த பாதிப்பு பொறுத்தவரை அதிகமான பதற்றம் ஏற்பட்டுள்ளது.

உடல் நலக்குறைவு என்று சோதனை செய்து கொண்டால் ஒரு சில நபர்களுக்கு இந்த வைரஸ் இருக்கும். இந்த வைரஸ் குறித்து பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை. பொது வெளியில் செல்லும் பொழுது முக கவசம் அணிய வேண்டும். பொதுவாக தற்போதைய காலகட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் முக கவசம் அடைந்து தான் செல்கிறார்கள். சீனாவில் எப்பொழுதுமே மக்கள் முக கவசம் அணிவார்கள்.

சானிடைசர் பயன்படுத்திக் கொள்வது மிகவும் நல்லது , எந்த நோய்கள் இருந்தாலும் தொற்றும் ஆனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு நான்கு முறை கை கழுவினால் எந்த பாதிப்பும் ஏற்படாது. அடிக்கடி கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் எதுவும் இந்த வைரஸ் தேவை இல்லை.

இந்த வைரஸ் பொருத்தவரை எந்த சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தாலே போதும். காய்ச்சல், சளி உள்ளவர்கள் வைரஸ் குறித்து பரிசோதனை மேற்கொள்ள தேவையில்லை. உடல்நலம் குறைவாக இருப்பவர்களுக்கு எந்த வைரஸ் ஆக இருந்தாலும் தாக்கும். பரிசோதனை மையம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் இது போன்ற பாதிப்பு இருந்தால் அரசு தெரிந்து கொள்ளும்”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement