For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விடுமுறை தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் அதிகாலை முதலே குவிந்துவரும் மக்கள்!

08:01 AM Jul 21, 2024 IST | Web Editor
விடுமுறை தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் அதிகாலை முதலே குவிந்துவரும் மக்கள்
Advertisement

வார விடுமுறை தினமான இன்று மெரினா கடற்கரையில் வழக்கத்தை விட மக்கள் அதிகமாக குவிந்து வருகின்றனர்.

Advertisement

சென்னை மெரினா கடற்கரை உலகப்புகழ் பெற்ற மிக நீளமான கடற்கரைகளில் ஒன்று. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வது வழக்கம். சனி, ஞாயிறு உள்பட வார இறுதி நாட்கள், மற்றும் விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் சுற்றுலா தலமாக இருக்கிறது. தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் நினைவுச் சின்னங்களின் அடையாளமாக திகழும் மெரினா கடற்கரை பொதுமக்களுக்கு மிகவும் பிடித்த சுற்றுலா தளமாக இருக்கிறது.

இங்கு வழக்கமாக வார நாட்களில் அதிகாலை முதல் மக்கள் கடற்கரை பகுதியில் நடை பயணம் மேற்கொள்வார்கள். ஆனால், வார விடுமுறை தினமான இன்று (ஜூலை 21) அதிகாலை முதலே வழக்கத்தை காட்டிலும் மெரினா கடற்கரையில் மக்கள் அதிகம் குவிந்து வருகின்றனர். குழந்தைகள், பெரியவர்கள் என குடும்பத்துடன் காலை நேரத்தை கடற்கரையில் செலவிட மக்கள் படையெடுத்துள்ளனர்.

எப்போதும் வார இறுதி நாட்களில் மாலை நேரங்களில் கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகம் இருக்கும். இன்று காலையிலேயே கடற்கரை மணற்பரப்பில் குழந்தைகளுடன், பெற்றோர்கள் விளையாடி மகிழ்கின்றனர். மேலும், மாற்றுத்திறனாளிகள் மிக அருகில் கடல் அலைகளை ரசிக்க அரசு சார்பில் கடற்கரையில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையில் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக சென்று மக்கள் கடலை ரசித்து வருகின்றனர்.

Tags :
Advertisement