For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை குறைவு!

09:28 AM Jul 29, 2024 IST | Web Editor
சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை குறைவு
Advertisement

கோயம்பேடு காய்கறி சந்தையில் பிற மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வரத்து அதிகரித்தன் காரணமாக காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது.

Advertisement

சென்னை கோயம்பேட்டில் மொத்த காய்கறிச் சந்தைகள் உள்ளன. இங்கு, பல்வேறு மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. வழக்கமாக கோடை காலம் தொடங்கியதும்,  நீர் பற்றாக்குறை,  கடும் வெப்பத்தால் பூக்கள் உதிர்வது போன்ற காரணங்களால் காய்கறி உற்பத்தி பாதிக்கப்படும்.  அதன் விளைவாக கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்து, அவற்றின் விலை கடுமையாக உயர்வது வழக்கம்.

இதையும் படியுங்கள் : செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பணியாளர்களின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது - மாநிலங்களவையில் மசோதா தாக்கல்!

அந்த வகையில் கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின்வரத்து சற்று அதிகரித்துள்ளதால் காய்கறி விலையானது குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெங்காயம் 36 ரூபாய்க்கும், ஒரு கிலோ உருளைக்கிழங்கு 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதைபோல், ஒரு கிலோ பச்ச மிளகாய் 45 ரூபாய்க்கும், ஒரு கிலோ முருங்கை 40 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அனைத்து காய்கறிகளும் கடந்த வாரங்களில் வரத்து குறைவின் காரணமாக அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து ஒரு சில காய்கறிகளின் விலையானது அதிகரித்தே உள்ளது. ஊட்டி கேரட் ஒரு கிலோ 110 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 140 ரூபாய்க்கும், பூண்டு ஒரு கிலோ 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
Advertisement