தக்காளி விலை கிடுகிடுவென உயர்வு - அடுத்த 15நாட்களில் பொதுமக்களுக்கு ஷாக் காத்திருக்கிறது!
தக்காளி விலை கிடுகிடுவென உயர்வால் அடுத்த 15நாட்களில் பொதுமக்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது.
தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
அதிலும் குறிப்பாக தக்காளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. ஒரு கிலோ ரூ.80க்கு விற்கப்படும் நிலையில், சில்லறை விற்பனையில் ஏற்கனவே விலை ரூ.90ஐ நெருங்கிவிட்டது. விரைவில் ரூ.100ஐ தொடும் எனவும் அஞ்சப்படுகிறது.
விலை உயர்வால் மக்கள் தேவையை குறைத்து கொண்டு காய்கறிகளை வாங்குவதாகவும், இதனால் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தேர்தல் நேரத்தில் தக்காளி விலை 20 ரூபாய்க்கு குறைவாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது விலை அதிகரித்துள்ளது. தக்காளியின் விலை நிலவரம் வருகிற 10 முதல் 15 நாட்கள் வரை குறைய வாய்ப்பில்லை என கமிஷன் மண்டி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.