தங்கம் விலை கிடுகிடு உயர்வு! எவ்வளவு தெரியுமா?
ஆபரணத் தங்கத்தின் விலை திங்கட்கிழமை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,240-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், சென்னையில் தங்கத்தில் விலை திங்கட்கிழமை பவுனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது.
இதையும் படியுங்கள்: நீதிமன்றங்களை அணுக மக்கள் அஞ்சக் கூடாது – தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்!
சென்னையில் ஆபரணத் தங்கம் ஞாயிற்றுக்கிழமை கிராம் ரூ.5,755-க்கும் பவுன் ரூ. 46,040-க்கும் விற்பனையானது. இந்நிலையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,755-க்கும், பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,640-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் ஏற்படாமல் இருந்த நிலையில் திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.1.30 உயர்ந்து கிராம் ரூ.81.50-க்கும், 1 கிலோ (கட்டி வெள்ளி) ரூ.80,200-க்கும் விற்பனையாகிறது.