தாறுமாறாக எகிறிய பூக்களின் விலை.... ஒரு கிலோ மல்லி இவ்வளவா?
பூக்கள் பிடிக்காதவர்களை பார்ப்பதே அரிது என்று சொல்லலாம். ஏனென்றால் இங்கு பலருக்கும் பூக்கள் மீது தனிப்பிரியம் உண்டு. இதனாலோ என்னவோ திருமணம் முதல் கோயில் பண்டிகை வரை அனைத்து இடங்களிலும் பூக்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக இதுபோன்ற பண்டிகை நாட்களில் பூக்ககளின் பல மடங்கு உயர்ந்து காணப்படும். வரத்து அதிகரிக்கும் நேரங்களில் மட்டும் ஓரளவு விலை குறையும்.
இதையும் படியுங்கள் : Budget 2025 | குடியரசுத் தலைவருடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு!
இந்த நிலையில், மதுரை மலர் சந்தையில் பூக்களின் விலை தாறுமாறாக எகிறியுள்ளது. அங்கு மல்லிகை ஒரு கிலோ மல்லிகை ரூ.7,000 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று கிலோ ரூ.3500க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.3,500 உயர்ந்துள்ளது. பனிப்பொழிவு மற்றும் வரத்து குறைவு காரணமாக பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக பனிப்பொழிவு அதிகரித்துதான் காணப்படுகிறது. இதன் காரணமாக பூக்களின் வரத்து பாதிக்கப்பட்டிருக்க கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
பூக்களின் விலை நிலவரம்:
மல்லிகை : 7000 ரூபாய்
முல்லை : 2500 ரூபாய்
பிச்சிப்பூ : 2500 ரூபாய்
கனகாம்பரம் : 2000 ரூபாய்
சம்பங்கி : 300 ரூபாய்
ரோஜா : 300 ரூபாய்
செவ்வந்தி : 250 ரூபாய்
அரளி- 200 ரூபாய்