தைத் திருநாளை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு!
09:31 AM Jan 13, 2024 IST
|
Web Editor
Advertisement
தைத்திருநாளை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
Advertisement
தைத்திருநாளை முன்னிட்டு சென்னை - கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
பூக்களின் விலை நிலவரம்:
- மல்லி கடந்த வாரம் 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 1600 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- சம்பங்கி பூ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இரு மடங்காக விலை அதிகரித்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- பன்னீர் ரோஸ் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 100 ரூபாய் அதிகரித்து 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- அரளிப்பூ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 40 அதிகரித்து 100 ரூபாய்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- கனகாம்பரம் 600 ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 300 அதிகரித்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- சாமந்திப்பூ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 50 ரூபாய் அதிகரித்து 110 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- சாதி மல்லி 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 450 அதிகரித்து 950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- சாக்லேட் ரோஸ் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வந்த நிலையில் இன்று 70 அதிகரித்து 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- கடந்த ஒரு வாரங்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வந்ததால் பூக்களின் வரத்து குறைந்துள்ளது.
- பணிக்காலம் தொடங்கி உள்ளதால் பல்வேறு வகையான பூக்களின் வரத்து குறைந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து கோயம்பேடுக்கு சந்தைக்கு வரும் பூக்கள் வழக்கத்துக்கு மாறாக குறைந்துள்ளது.
நாளை மறுநாள் பொங்கல் திருநாளை முன்னிட்டு மீண்டும் பூக்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Article