வரத்து குறைவால் நெல்லையில் மீன்களின் விலை கணிசமாக உயர்வு!
நெல்லை மாவட்டத்தில் மீன்கள் வரத்து குறைவாக உள்ளதால், மீன்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் 10 மீனவ கிராமங்களும், 8000 மீனவர்களும் உள்ளனர். இங்கு நாட்டுப்படகுகள் மூலம் மீன்கள் பிடித்து வரப்படுகின்றன. இதனால், இப்பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்களுக்கு அனைத்து மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு உண்டு. தற்போது மீன்களின் வரத்து குறைந்து இருப்பதால் மீன்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
ஒரு கிலோவுக்கு ரூ.200 முதல் 400 வரை விலை உயர்த்தப்பட்டு மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சென்ற வாரம் வரை ஒரு கிலோ சாளைமீன் 150 ரூபாய் வரை
விற்பனையானது. இன்று ரூ.300 முதல் ரூ. 400 வரை விற்பனையாகிறது. நேற்று ஒரு கிலோ இறால் ரூ. 500க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.900 க்கு விற்பனையாகிறது. ரூ.200 க்கு விற்பனையான விளைமீன் ரூ. 400 க்கும், ரூ. 300 க்கு விற்பனையான பாறை மீன் ரூ. 600 க்கும், ரூ. 600 க்கு விற்பனையான சீலா மீன் ரூ. 850 க்கும் விற்பனையாகிறது.
இதுகுறித்து மீன் வியாபாரிகள் கூறும்போது, மீன்களின் வரத்து குறைவாக இருப்பதால், விலை உயர்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.