Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விக்ரம் பிரபு நடித்துள்ள "GHAATI" படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!

விக்ரம் பிரபுவின் பிறந்தநாளை முன்னிட்டு 'காதி' படக்குழு கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது.
09:28 PM Jan 15, 2025 IST | Web Editor
Advertisement

நடிகை அனுஷ்கா ஷெட்டியின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி. காதல் கதையான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் தனது 50-வது படமான “காதி” என்ற படத்தில் அனுஷ்கா நடித்து முடித்துள்ளார்.

Advertisement

சமீபத்தில் நடிகை அனுஷ்காவின் பிறந்த நாளை முன்னிட்டு காதி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

அனுஷ்கா ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில்  விக்ரம் பிரபு நடித்து வருகிறார். இப்படம் மூலம் அவர் நேரடி தெலுங்கு திரைப்படத்தில் அவர்   அறிமுகமாக உள்ளார். இன்று நடிகர் விக்ரம் பிரபுவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு 'காதி' படக்குழு கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

Tags :
GhaatiGlimbseVideoVikram Prabhu
Advertisement
Next Article