Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வேட்டையாடும் ரஜினியின் வேட்டையன் #FDFS - திரையரங்குகளில் ரசிகர்கள் ஆரவாரம்!

11:41 AM Oct 10, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் இன்று வெளியாகிறது. தமிழ்நாடு முழுவதும் ரஜினி ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. ஜெய் பீம் படத்தை எடுத்த ஞானவேல் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அனிருத் இசையில் இதன் பாடல்கள் ஏற்கெனவே ஹிட் அடித்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் வேட்டையன் திரைப்படம் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

தமிழ்நாட்டில் காலை 9 மணி சிறப்புக்காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் படத்தைக் காண திரையரங்குகளுக்கு படையெடுத்துள்ளனர்.

சென்னை:

சென்னையில் ரஜினி ரசிகர்கள் அதிகாலை 4 மணி முதலே திரையரங்குகளில் குவிந்தனர். திரையரங்குகள் முன் பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுவதால் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை:

ரஜினியின் வேட்டையன் படம் வெளியாவதை முன்னிட்டு மதுரையில் ரஜினி ரசிகர்கள், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், கேக் வெட்டியும் திரையரங்கு முன்பாக ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ரஜினி கட் அவுட் க்கு பால அபிஷேகம் செய்து ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரஜினி வேடமணிந்து வேட்டையன் திரைப்படத்தை காண ரசிகர்கள் குவிந்துள்ளனர். மதுரையில் 20 திரையரங்கில் வேட்டையன் திரைப்படம் வெளியாகியுள்ளது.

திருநெல்வேலி:

வேட்டையன் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை நெல்லையில் ரஜினி ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். திரையரங்கம் முன்பு நடிகர் ரஜினிகாந்த் உடல் நலத்துடன் பூரண ஆயுள் பெற வேண்டி சிறப்பு யாகமும் நடத்தப்பட்டது.

நெல்லை, அம்பாசமுத்திரம் பாலாஜி திரையரங்கத்தில் ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தின் முதல் காட்சியை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். திரையரங்கு முன்பு பட்டாசுகள் வெடித்து இனிப்புகளை வழங்கியும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி:

திருச்சி எல்.ஏ.சினிமா திரையரங்கில் வேட்டையன் படம் வெளியானதை தொடர்ந்து, ரஜினி பேனருக்கு ஒரு டன் எடையுள்ள பூக்களை தூவி ரசிகர்கள் கொண்டாடினர்.

ஈரோடு:

ஈரோட்டில் ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையின் திரைப்படத்தை வரவேற்கும் வகையில் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் மேளதாளத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags :
Amitabh BachchanFahadh FaasilNews7TamilRajinikanthRana DaggubatiVettaiyan
Advertisement
Next Article