"சோலே பத்தூரை சாப்பிடுங்க... உடல் எடையை குறைங்க..." - இணையத்தில் வைரலாகும் உணவகத்தின் போஸ்டர்!
டெல்லியில் உள்ள ஒரு உணவகத்தில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
டெல்லியில் உள்ள கோபால் ஜி என்ற உணவகத்தில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த போஸ்டரில் "சோலே பத்தூரை சாப்பிடுங்கள், உடல் எடையை குறையுங்கள் நோய்களிலிருந்து விடுபடுங்கள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த போஸ்டர், "டெல்லியில் மட்டுமே இதை எதிர்பார்க்க முடியும்" என்ற தலைப்புடன் @psychedelhic என்ற எக்ஸ் தள பக்கத்தில் பகிரப்பட்டது.
அந்த பயனர், கோபால் ஜி உணவகத்திற்கு வெளியே உள்ள கூட்டத்தினையும், தட்டில் வைக்கப்பட்டிருந்து சோலே பத்தூரின் படத்தையும் பகிர்ந்துள்ளார். உணவகத்திற்கு வெளியே உள்ள ஒரு பேனரில், அதற்கு கிளைகள் எதுவும் இல்லை என்று கூறுயிருக்கிறது.. இந்த இடுகை மே 26 அன்று பகிரப்பட்டது. அது 44,500 பார்வைகளைப் பெற்றுள்ளது மற்றும் எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வருகிறது. பலரும் இது குறித்த கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கு "இது வேடிக்கையானது மற்றும் மூர்க்கத்தனமானது" என்று ஒரு நபர் பதிவிட்டுள்ளார். மற்றொருவர், “நான் 6 ஆம் வகுப்பில் இருந்தே இந்த இடத்தில் சாப்பிட்டு வருகிறேன். அப்போது ஒரு தட்டு 7 ரூபாய், இப்போது 120 ரூபாய். ஆனால் அவர்கள் இன்னும் சிறந்த சோலே பத்தூரை கொடுத்து வருகின்றனர்” என்றார்.
“100% இயற்கையானவை எந்த பக்க விளைவுகளும் இல்லை என்று பலரும் பொருட்களை விற்பது இப்படித்தான். உண்மையில், பலர் நச்சு கலவைகளை உட்கொள்வதன் மூலம் தங்கள் உயிரைப் பணயம் வைக்கிறார்கள்”என்று ஒருவர் கூறினார். "FSSAI இதைப் பார்த்து, அவர்களுக்கு அபராதம் விதிக்கும் வரை, இது வேடிக்கையாகத்தான் இருக்கும்" என்று கருத்து தெரிவித்தார்.