சவூதி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கியபோது தீ விபத்து! - பாகிஸ்தானில் பரபரப்பு!
சவூதி விமானம் பாகிஸ்தான் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விமானத்தில் தீப்பிடித்ததால் அதிலிருந்த அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரிலுள்ள விமான நிலையத்தில் சவூதி ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான விமானம் நேற்று தரையிறங்கியது. அப்போது, அதனை தரையிறக்கும் சக்கரப் பகுதியில் திடீரென தீப்பிடித்தது. அதிலிருந்து புகையும் தீப்பொறிகளும் வெளியேறுவதைக் கவனித்த நிலைய அதிகாரிகள், தீயணைப்பு படையினருக்கு உடனடியாக தகவல் அளித்தனர்.
அதையடுத்து அந்தப் பகுதிக்கு விரைந்த தீயணைப்பு படையினர் விமானத்திலிருந்த 276 பயணிகள், 21 பணியாளர்களை அவசரமாக வெளியேற்றினர். தீயும் முற்றிலுமாக அணைக்கப்பட்டது என்று அதிகாரிகள் கூறினர்.
இதையும் படியுங்கள் : தமிழ் வளர்ச்சித் துறை விருது | சிறந்த நூல்கள்: ‘கதவு திறந்ததும் கடல்’ மற்றும் ‘தண்ணீர்: நீரலைகளும் நினைவலைகளும்’ | சிறந்த பதிப்பகம்: ‘ஹெர் ஸ்டோரிஸ்’
இந்த சம்பவத்தில் தரையிறங்கும் கருவிகளில் தீப்பற்றியதை, தீயணைப்பாளர்கள் அணைப்பதையும் மற்றும் மக்கள் ஸ்லைடைப் பயன்படுத்தி விமானத்தைவிட்டு வெளியேற்றுவதையும் காணொளியில் காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் தீ பற்றிய காரணம் குறித்து, தெளிவான தகவல் கிடைக்கப்பெறவில்லை. இதுகுறித்து, விமான நிலைய அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.