மீன்பிடி கப்பலை சிறைபிடித்த கடற்கொள்ளையர்கள் - அதிரடியாக மீட்ட இந்திய கடற்படை.!
மீன்பிடி கப்பலை சிறைபிடித்த சோமாலியா கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்த நிலையில் இந்திய கடற்படை அதிரடியாக மீட்டுள்ளது.
கடந்த 29ம் தேதி சோமாலியாவின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதியில் இருந்து அல் நயீமி என்ற மீன்பிடிக் கப்பலைக் கடத்த ஆயுதம் ஏந்திய சோமாலியா கடற்கொள்ளையர்கள் 11 பேர் முயற்சி செய்தனர். அப்போது ரோந்துப் பணியில் இருந்த ஐஎன்எஸ் சுமித்ரா கப்பல் துரிதமாக செயல்பட்டு ஈரானிய மீன்பிடி கப்பலை மீட்டது. அதிலிருந்த 19 பேரும் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களாவர்.
அதுமட்டுமல்லாது, கொச்சியில் இருந்து 850 நாட்டிக்கல் மைல் தொலைவில் தெற்கு அரேபியக் கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிக்கும் இந்திய போர்க் கப்பல்கள் கடற்கொள்ளையர்களைக் கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பணியாற்றி வருகிறது
இதன் மூலம் சோமாலியா கடற்கொள்ளையர்கள் வசம் சிக்கவிருந்த ஈரானிய கொடியுடன் சென்ற மீன்பிடிக் கப்பலை இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் சுமித்ரா போர்க்கப்பல் துரிதமாக செயல்பட்டு மீட்டுள்ளது.
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற இந்திய போர்க்கப்பல், சோமாலிய கடற்கொள்ளையர்களை விரட்டியடித்தது. ஈரான் மீன்பிடி படகு FV இமான் மற்றும் அதிலிருந்த17 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.