For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"எடப்பாடி பழனிசாமி சொல்வதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்" - செல்வப்பெருந்தகை பேட்டி!

தமிழக நலனில் அக்கறை கொண்ட தலைவர்கள் இந்தியா கூட்டணியில் இணைவார்கள் என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
10:23 AM Aug 03, 2025 IST | Web Editor
தமிழக நலனில் அக்கறை கொண்ட தலைவர்கள் இந்தியா கூட்டணியில் இணைவார்கள் என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
 எடப்பாடி பழனிசாமி சொல்வதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்    செல்வப்பெருந்தகை பேட்டி
Advertisement

தூத்துக்குடி ஆறுமுகமங்கலம் பகுதியில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூற தூத்துக்குடி வருகை தந்த காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், "எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் போதை புலக்கம் அதிகமாக இருப்பதாக பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால் கஞ்சா போதை பொருள் தமிழகத்தில் அதிகம் வருவதற்கு காரணம் குஜராத் மாநில துறைமுகம், முத்ரா துறைமுகம். இந்த இரண்டு துறைமுகம் தான் முக்கியமான துறைமுகம்.

Advertisement

பாகிஸ்தான் எல்லையில் இருக்கக்கூடிய துறைமுக முத்ரா துறைமுகம் ஆந்திரா வழியாக போதை பொருட்கள் தமிழகம் வருகிறது. மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய இந்தியா பார்டர் போலீஸ், மத்திய உளவுத்துறை, சிஆர்பிஎப், சி ஐ எஸ் எப் போதை பொருள் தடுப்பு பிரிவு நாற்காடிக் டிபார்ட்மெண்ட் இதெல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறது தமிழ்நாட்டு மொத்தம் போதை பொருள் வருவதை தடுக்க இயலவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அதானி துறைமுகத்தில் பல லட்சக்கணக்கான மூட்டை போதை பொருட்கள் பறிமுதல் செய்து வைத்திருந்தார்கள். அதற்கு ஏதாவது எடப்பாடி பழனிச்சாமி பதில் சொல்ல முடியுமா? மத்திய அரசை பார்த்து கேட்பாரா ஏன் கைப்பற்றி வைத்திருந்த போதை பொருட்கள் காணாமல் போய்விட்டது என்று உயர்
நீதிமன்றம் டெல்லியில் ஆணை பிறப்பித்திருக்கிறது மீண்டும் அதை பிரித்து கான்லா துறைமுகத்திற்கும், முத்ரா துறைமுகத்திற்கும் மறு விற்பனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறதா என்று எடப்பாடி பாஜக அரசியல் நோக்கி கேட்க வேண்டும்.

ஒரு காலத்தில் போதை பொருள்கள் விற்பனை செய்யும்போது வழக்குகளை பதிவு செய்யப்படாது. இப்போது போதைப் பொருள்கள் கண்டுபிடித்தால் உடனுக்குடன் வழக்கு பதிவு செய்கிறது தமிழக அரசு. எடப்பாடி செய்த ஆட்சிக்கும் தற்போது நடைபெறும் ஸ்டாலின் ஆட்சிக்கும் எவ்வளவு வித்தியாசம் என்பதை புரிந்து
கொள்ள வேண்டும்.

ஆணவ படுகொலை என்பது தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்படுத்தி இருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அந்த குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வதற்காகவும் முழுமையான விவரத்தை கேட்டு அறிவதற்காகவும் ஆறுமுகம் மங்கலம் செல்ல இருப்பதாக செல்வம்பெருந்தகை கூறினார். காங்கிரஸ் எப்போதுமே ஆணவ படுகொலையை எதிர்த்து தனி சட்டம் கொண்டுவர வேண்டும் என கூறி வருகிறது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக சட்டம் இயற்றப்படும் என கூறியிருக்கிறார்.

அதிமுக, பாஜக கூட்டணி இயற்கையிலேயே ஏற்றுக் கொள்ள முடியாத கூட்டணி கட்சித் தலைவர்களையே இழிவுபடுத்தி பேசக்கூடிய பாஜகவுடன் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ள எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கிறார். ஆகவே எடப்பாடி சொல்வதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் இது இயற்கைக்கு எதிரான கூட்டணி, அதிமுக கட்சி கொள்கைக்கு முரணான கூட்டணி.

ஓ பன்னீர்செல்வம் பாஜகவில் இருந்து வெளியேறியது பற்றி கேள்விக்கு பதிலளித்தவர், தமிழக நலனின் அக்கறை உள்ள அரசியல் தலைவர்கள் இந்தியா கூட்டணியை ஆதரிப்பார்கள்" என்று தெரிவித்தார்கள்.

Tags :
Advertisement