Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கட்டாயப்படுத்தி வெளியேற்றப்படும் மாஞ்சோலை மக்கள்... தேசிய மனித உரிமை ஆணையம் வழக்குப்பதிவு!

04:17 PM Jul 25, 2024 IST | Web Editor
Advertisement

மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த டெல்லி தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடிவு செய்துள்ளது.

Advertisement

நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களை கடந்த 1929-ம் ஆண்டு பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தது. வரும் 2028-ம் ஆண்டில் அந்த நிறுவனத்தின் குத்தகை காலம் முடியவுள்ள நிலையில் அதற்கு முன்பாகவே அந்த நிறுவனம், தேயிலை தோட்டத் தொழிலாளர்களை கட்டாய ஓய்வில் அனுப்ப முடிவு செய்தது.

இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், மாஞ்சோலையில் இருந்து தேயிலை தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்ற இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து பிபிடிசி நிறுவனமும் தொழிலாளர்கள் வீடுகளை தற்காலிகமாக காலி செய்ய வேண்டாம் எனவும் அறிவிப்பு வெளியிட்டது. இலங்கையிலிருந்து வந்த தமிழர்களுக்காக எப்படி வாழ்வளிக்க டான்டீ நிறுவனம் தொடங்கப்பட்டதோ, அதுபோல தொடர்ந்து இந்த தேயிலை தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் இதற்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த தொழிலை தவிர வேறு எந்த தொழிலும் தெரியாத மக்களை வெளியேற்றக் கூடாது என பலரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மாஞ்சோலை தொழிலாளர்கள் வெளியேற்ற விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது.  நெல்லையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துராமன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

96 ஆண்டுகளாக வனத்தில் குடியிருந்து வரும் மாஞ்சோலை மக்களுக்கு வன உரிமை மறுக்கப்படுவதாகவும், மாஞ்சோலை தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவது மனித உரிமை மீறல் என மனுவில் முத்துராமன் குறிப்பிட்டுள்ளார். டெல்லி தேசிய மனித உரிமை ஆணையம் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளது. விரைவில் இந்த வழக்கு தேசிய மனித உரிமை ஆணையத்தில் விசாரணைக்கு வருகிறது.

Tags :
ManjolaiManjolai workersNational Human Rights Commissiontea estatesTN Govt
Advertisement
Next Article