Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"வக்ஃபு சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது திருப்புமுனை" - பிரதமர் மோடி பெருமிதம்!

வக்ஃபு சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது திருப்புமுனையாக அமைந்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
09:22 AM Apr 04, 2025 IST | Web Editor
Advertisement

வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதா நேற்று அதிகாலை மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று அதிகாலை மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது குறித்து பிரதமர் மோடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

இதுகுறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

”நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்ஃபு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது திருப்புமுனையாக அமைந்துள்ளது. நீண்ட காலமாக ஒதுக்கப்பட்டவர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும் இந்த மசோதா உதவும். நாடாளுமன்றம் மற்றும் கூட்டுக் குழு விவாதங்களில் பங்கேற்று, தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி சட்டங்களை வலுப்படுத்த பங்களித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி.

கூட்டுக் குழுவுக்கு மதிப்புமிக்க கருத்துகளை அனுப்பிய எண்ணற்ற மக்களுக்கும் நன்றி. விவாதம் மற்றும் உரையாடலின் முக்கியத்துவம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக வக்ஃபு அமைப்பு வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருந்தது. குறிப்பாக முஸ்லிம் பெண்கள், ஏழை முஸ்லிம்கள், பாஸ்மண்டா முஸ்லிம்களுக்கு தீங்கு விளைவித்தது.

நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் வருங்காலத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும்.  மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும். ஒவ்வொரு குடிமகனின் கண்ணியத்துக்கும் முன்னுரிமை அளிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதுதான் வலுவான இந்தியாவை உருவாக்குவதற்கான வழி”

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tags :
Narendra modinews7 tamilNews7 Tamil UpdatesPM ModiPMO IndiaWaqf Amendment BillWaqf Bill 2025
Advertisement
Next Article