Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"பாஜக அரசை தட்டிக் கேட்க கூடிய ஒரே தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் தான்" - கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் புகழாரம்!

பாஜக அரசை தட்டிக் கேட்க கூடிய ஒரே தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
07:36 AM Apr 07, 2025 IST | Web Editor
Advertisement

விருதுநகர் மாவட்டம் மகாராஜபுரத்தில் திமுக சார்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அப்போது கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்,

Advertisement

"எந்தக் கட்சியாக இருந்தாலும் ஆளுங்கட்ச்சியாக ஆன பின்பு 10 முதல் 20 சதவீதம் வரை செல்வாக்கு குறையும். ஆனால் திமுக அரசிற்கு ஆளுங்கட்சியான பின்பு வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கு காரணம் பொதுமக்களாகிய நீங்கள், தமிழக முதல்வரை சகோதரராக நீங்கள் நேசிக்கிறீர்கள். இதுவரை 90 சதவீத வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி உள்ளது.

பேருந்தில் விடியல் பயணம் மூலம் கட்டணம் இல்லாமல் பெண்கள் செல்லலாம். பெண்கள் பேருந்தில் நின்றால் கூட அவர்களை உட்கார வைக்க வேண்டியது நடத்துனரின் வேலை. மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. பெண்களை வேலை செய்யாமல் வீட்டில் சும்மா இருக்கிறார்கள் எனக் கூறுகிறோம்.

ஆனால் அனைத்து வேலைகளுமே செய்பவர்கள் பெண்கள் தான். ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக வேலை செய்கிறார்கள். அதனால்தான் தமிழக முதல்வர் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்குகிறார்.

மத்திய அரசாங்கம் திமுகவை எதிர்க்கிறது. தமிழகத்திற்கு வஞ்சகம் செய்கிறது. இதை எதிர்த்து போராடக் கூடிய ஒரே தலைவர் ஸ்டாலின் மட்டும் தான். இந்தியாவிலேயே மோடி அரசாங்கத்தை தட்டிக் கேட்க கூடிய ஒரே தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் மட்டும்தான்.

அவரவர்கள் மதத்தில் சாமி கும்பிடுவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. நாடு நன்றாக இருக்க வேண்டும் என நாம் நினைக்கின்றோம். எம்மதமும் சம்மதம் எனக் கூறுகிறோம். ஆனால் பாஜக இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் இருக்கக் கூடாது என நினைத்து நம்மை பிரிக்கிறார்கள்.

ஆண்டாண்டு காலமாக ஒற்றுமையாக உறவுமுறை கொண்டு அழைக்கிறோம். இதைக் கெடுக்கும் வகையில் பாஜக செய்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் தவிடு பொடியாக்க மமுதலமைச்சருக்கு அனைவரும் உறுதியாக உறுதுணையாக இருக்க வேண்டும். வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு
மிகப்பெரிய வெற்றியை நீங்கள் கொடுக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் சண்டை செய்கிறார்கள் ஆனால் இதையெல்லாம் காதில் வாங்காத செவிட்டு அரசாங்கமாக மத்திய அரசாங்கம் உள்ளது" என தெரிவித்துள்ளார்.

Tags :
BJPCHIEF MINISTERgovernmentleaderRamachandranstalin
Advertisement
Next Article