For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - விழுப்புரத்தில் பிளாஸ்டிக் இன்றி போகி கொண்டாடிய மக்கள்...!

08:17 AM Jan 14, 2024 IST | Web Editor
 பழையன கழிதலும் புதியன புகுதலும்    விழுப்புரத்தில் பிளாஸ்டிக் இன்றி போகி கொண்டாடிய மக்கள்
Advertisement

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் போகிப் பண்டிகையை முன்னிட்டு
பிளாஸ்டிக்கை தவிர்த்து பழைய பொருட்களை தீயிலிட்டு எரித்து பொதுமக்கள்
கொண்டாடினர்.

Advertisement

மார்கழி மாதத்தின் இறுதி நாளான இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தை மாதத்தை வரவேற்கும் வகையிலும், பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற சொல்லிற்கேற்ப கொண்டாடப்படுகிறது. மேலும், இந்த நாள் வரை நம் மனதில் உள்ள தீய எண்ணங்களையும், உறவுகள் மற்றும் நண்பர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகளை எல்லாம் அக்னி குண்டத்தில் போட்டு தீயிட்டு கொளுத்தி நம் வீட்டையும், மனதையும் சுத்தமாக்கும் வகையில் வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை தீயிட்டு எரிக்கும் வழக்கத்தை கடைப்பிடிக்கும் நாளாக போகி பண்டிகையை தமிழ்நாடு மக்கள் கொண்டாடி வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் : பொங்கல் பண்டிகை – சென்னையில் இருந்து 8 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்…!

அந்ந வகையில், தமிழ்நாடு முழுவதும் இன்று போகிப் பண்டிகையை பொதுமக்கள்
கொண்டாடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் போகிப்
பண்டிகையை பொதுமக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

மாவட்டத்தின் நகர மற்றும் கிராம புற பகுதிகளான மேட்டுப்பாளையம், இராம்பாக்கம், விக்கிரவாண்டி, செஞ்சி, திண்டிவனம், வானூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாலையிலேயே தங்கள் வீட்டில் உள்ள கிழந்த பாய், தரை விரிப்புகள், கிழந்த துணிகள், பேப்பர் குப்பைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பழைய பொருட்கள் மற்றும் தேவையற்ற பொருட்களை வீட்டின் முன்பு போட்டு தீயிட்டு எரித்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் போகி பண்டிகையை பொதுமக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதில் அரசு விதிமுறைகளை பின்பற்றி பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மற்ற பொருட்களை மட்டுமே பொதுமக்கள் தீயிட்டு கொளுத்தி போகிப் பண்டிகையை கொண்டாடினர்.

Tags :
Advertisement