Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘குட் பேட் அக்லி’-யின் ஓஜி சம்பவம் - First single தேதியை அறிவித்த படக்குழு!

அஜித் குமார் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் முதல் பாடல் வருகிற மார்ச் 18ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
06:47 PM Mar 14, 2025 IST | Web Editor
Advertisement

விடா முயற்சி படத்திற்கு பிறகு அஜித் குமார் – திரிஷா மீண்டும் இணைந்து நடித்துள்ள  திரைப்படம்  ‘குட் பேட் அக்லி’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில்  பிரசன்னா, சுனில், அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மைத்திரி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

Advertisement

இப்படம் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், முன்னதாக படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்தது. தொடர்ந்து சமீபத்தில் திரிஷாவின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியானது. அதன்படி அவர் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து படத்தின் டீசர் கடந்த மாதம் இறுதியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதன்பின்பு சமீபத்தில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்தின் முதல் பாடல் குறித்து  “ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் மாமே, சுடச் சுட ரெடி பண்ணிட்டு இருக்கோம்” என்றும்  “ஓஜி சம்பவம், இறுதிகட்ட ரெக்கார்டிங் பணிகள் நடைபெறுகிறது” என தனது எக்ஸ் பதிவில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள டீசர் மேக்கிங் வீடியோவின் இறுதியில் படத்தின் முதல் பாடல் வருகிற மார்ச் 18ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Adhik Ravichandranajith kumarfirst singleGood Bad UglyGV PrakashOGSambavamTrisha
Advertisement
Next Article