For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"ஆங்கில வழிப் பள்ளிகள் மீதான மோகம் தற்கொலைக்கு நிகரானது" - என்சிஇஆர்டி இயக்குநர்!

09:38 AM Jun 19, 2024 IST | Web Editor
 ஆங்கில வழிப் பள்ளிகள் மீதான மோகம் தற்கொலைக்கு நிகரானது    என்சிஇஆர்டி இயக்குநர்
Advertisement

அரசுப்பள்ளிகளில் தற்போது தரமான கல்வி வழங்கப்பட்டு வரும் நிலையில் ஆங்கில வழிப் பள்ளிகள் மீதான பெற்றோரின் மோகம் தற்கொலைக்கு நிகரானது என NCERT இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி தெரிவித்தாா்.

Advertisement

இது குறித்து அவா் கூறியதாவது,

"நீண்ட காலமாகவே ஆங்கிலவழிக் கல்வி மீது பெற்றோருக்கு ஒரு ஈர்ப்பு, மோகம் உள்ளது.  அரசு பள்ளிகளில் தற்போது தரமான கல்வி வழங்கப்படுகிறது.  பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் போதுமான அளவில் இல்லாதபோதிலும்,  ஆங்கில வழிப் பள்ளிகள் மீதான பெற்றோரின் மோகம் என்பது தற்கொலைக்கு நிகரானது.  பெற்றோர்களின் இந்த மனநிலையை மாற்றி,  தாய்மொழியில் கல்வி கற்பதை ஊக்குவிக்கவே புதிய தேசிய கல்விக்கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தாய்மொழியில் கல்வி கற்கவில்லை என்றால் நமது பாரம்பரியம்,  கலாசார வோ்களை எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்?  ஒடிசாவில் இரு பழங்குடியின மொழிகளில் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு புகைப்படங்கள்,  கதைகள் மற்றும் பாடல்கள் வடிவில் கற்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

121 மொழிகளில் புத்தகங்கள் தயாா் செய்யப்பட்டு பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படவுள்ளன.  இதன்மூலம் அவர்கள் தங்களின் கலாசார வோ்களை அவா்கள் அறிந்துகொள்ள முடியும்.  ஆங்கிலவழிப் படிப்புகளில் அதிகளவு பாடங்கள் திணிக்கப்படுகின்றன.  இது மாணவர்களிடம் அறிவு இழப்புக்கு வழிவகுக்கிறது. தற்போது பலமொழிக்கல்வி மூலம் மீண்டும் நமது பாரம்பரியம் நிலைநிறுத்தப்படவுள்ளது" என்றாா்.

Tags :
Advertisement