For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"தமிழ்நாட்டில் #Ramsar தளங்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

09:45 PM Aug 14, 2024 IST | Web Editor
 தமிழ்நாட்டில்  ramsar தளங்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு    முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெருமிதம்
Advertisement

தமிழ்நாட்டில் உள்ள ராம்சார் தலங்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Advertisement

ராம்சார் அங்கீகாரம் என்பது ஈரநிலங்களுக்கான சாசனம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் ஈரானில் உள்ள ராம்சார் என்ற நகரத்தில் கையெழுத்தானது. அதன்படி, இந்த அங்கீகாரம் பெறும் இடங்கள் ராம்சார் தளங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் 16 இடங்கள் ராம்சார் தளங்களாக அங்கீகரிக்கப்பட்டிருந்தன. இந்த சூழலில் நஞ்சராயன் பறவைகள் காப்பகம் மற்றும் விழுப்புரம் மாவட்டம் கழுவேலி பறவைகள் காப்பகம் ராம்சார் அங்கீகாரம் பெற்றுள்ளன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள ராம்சார் தலங்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,

"திருப்பூர் மாவட்டம் நஞ்சராயன் பறவைகள் காப்பகம் மற்றும் விழுப்புரம் மாவட்டம் கழுவேலி பறவைகள் காப்பகம் ஆகியவற்றுடன் சேர்த்து தமிழ்நாட்டில் உள்ள ராம்சார் தலங்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இந்தத் தொடர் சாதனை தமிழ்நாடு வனத்துறையின் அர்ப்பணிப்பு மிகுந்த முயற்சிகளையும், திமுக ஆட்சி நிர்வாகம் சுற்றுச்சூழலைக் காப்பதில் கொண்டுள்ள உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது" என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement