"தமிழ்நாட்டில் போதைக்கு அடிமையானோர் எண்ணிக்கை அதிகரிப்பு" - எடப்பாடி பழனிசாமி!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செஞ்சி பேருந்து நிலையம் அருகேயுள்ள திருவண்ணாமலை சாலையில் "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" சுற்றுபயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அப்போது பேசியவர், "எடப்பாடி பழனிச்சாமி என்னவோ பேசுகிறார் என்று ஸ்டாலின் தெரிவிக்கிறார். நான் பேசினால் அவருக்கு என்ன?
தமிழ்நாட்டில் போதை பொருளுக்கு அடிமையானோர் அதிகரித்துள்ளனர். குடும்ப ஆட்சி அகற்ற பட வேண்டும், ஆளும் கட்சியாக இருந்தால் ஒரு பேச்சு, எதிர்கட்சியாக இருந்தால் ஒரு பேச்சு என இரட்டை வேடம் போடுகிறார் ஸ்டாலின்.
மக்கள் விரோத திமுக அரசு அகற்ற பட வேண்டும், திமுகவிற்கு கொள்கை இருக்கிறதா. திமுகவிற்கும், விசிகவிற்கும், காங்கிரசுக்கும் ஒரே கொள்கையா? பாரதிய ஜனதா கட்சியுடன் திமுக கூட்டணி வைத்தால் அது நல்லது, அதுவே அதிமுக கூட்டணி வைத்தால் மதவாத கட்சியுடன் கூட்டணி வைத்ததாக கூறுவது, 16 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சியில் இருந்து எந்த திட்டத்தினை கொண்டு வந்தீர்கள்.
அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைத்து பார்க்க முடியாது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின் நிறைய செய்ய பார்த்தார்கள், ஆனால் எதுவும் செய்ய முடியவில்லை, சந்தர்ப்ப சூழலில் ஸ்டாலினுக்கு ஆட்சி கிடைத்திருக்கிறது" என்று தெரிவித்துள்ளார். .