கமல்ஹாசன், மணிரத்தினம் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் அடுத்த அப்டேட் நாளை வெளியாகிறது!!
கமல்ஹாசன், மணிரத்தினம் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தின் தலைப்பு நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் 2 திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான நிலையில் நான்கு ஆண்டுகள் கழித்து வெளியான திரைப்படம் விக்ரம் 2. இந்த படம் கமல்ஹாசனே எதிர்பாராத அளவுக்கு மிகப்பெரிய வெற்றி பெற்றது. வசூலை வாரிக்குவித்தது.
இதனையடுத்து கமலின் மார்க்கெட் மீண்டும் அதிகரித்தது. இந்தியன் -2க்குப் பிறகு கமல்ஹாசன் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளதாக தகவல் உறுதியாகியுள்ளது
இந்நிலையில், சைமா விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இயக்குநர் மணிரத்னம், கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது மணிரத்னத்திடம் கமல் 234 படம் குறித்த அப்டேட்டை லோகேஷ் கனகராஜ் கேட்டார். இந்த கேள்விக்கு சுதாரித்த மணிரத்னத்திடம் படத்தின் தயாரிப்பாளரிடம் கேளுங்கள் என்றார்.
இந்த நிலையில் கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது.
ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவில் இப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் ராஜ் கமல் ஃபிலிம்ஸின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் தொடக்க விழா குறித்த வீடியோவை வெளியிட்டது. இந்த வீடியோவில் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான், மணிரத்னம் மற்றும் ரவி.கேசந்திரன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இதேபோல கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து ஆகிய படங்களுக்குப் பிறகு ரவி கே. சந்திரன் 3வது முறையாக மணிரத்னமுடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் தலைப்பு நாளை வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
The Beginning!
Get Ready for the Grand Reveal tomorrow at 5pm➡️https://t.co/VQvAwutrZS#KH234 #Ulaganayagan #KamalHaasan #HBDKamalSir #HBDUlaganayagan@ikamalhaasan #ManiRatnam @arrahman #Mahendran @bagapath @MShenbagamoort3 @RKFI @MadrasTalkies_ @RedGiantMovies_… pic.twitter.com/K8QzwvpURL
— Turmeric Media (@turmericmediaTM) November 5, 2023