Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் மத்திய அரசு அடுத்த துரோகம் செய்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவுட்டுள்ளார்.
11:19 AM Nov 20, 2025 IST | Web Editor
உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் மத்திய அரசு அடுத்த துரோகம் செய்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவுட்டுள்ளார்.
Advertisement

உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் மத்திய அரசு அடுத்த துரோகம் செய்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவுட்டுள்ளார்.

Advertisement

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

"கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி பிரதமர் வந்து சென்ற ஈரம்கூட இன்னும் காயவில்லை; அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது கோரிக்கையை நிராகரித்துள்ளது பாஜக அரசு. கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை? விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை? கண்ணீர் ஏன் தெரியவில்லை?

கடந்த ஆண்டுகளில், தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளின் அடிப்படையில், இத்தகைய ஈரப்பத அளவிற்கான தளர்வைப் பலமுறை வழங்கிய மத்திய அரசு தற்போது வழங்க மறுப்பது ஏன்? கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு எந்தவிதத்தில் நன்மை செய்யும் என நினைக்கிறீர்கள்? உடனடியாக இவற்றை மறுபரிசீலனை செய்வதோடு, தமிழ்நாட்டின் கோரிக்கைகள் மீது நல்லதொரு முடிவெடுத்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு மத்திய அரசு நன்மை செய்யும் என நம்புகிறேன்"

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags :
CMO TAMIL NADUDMKfarmersMK StlainNarendra modiPM ModiTN Govt
Advertisement
Next Article