CSK புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்! கேப்டன் பொறுப்பிலிருந்து விடைபெற்றார் எம்.எஸ்.தோனி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக அந்த அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டில் நாடு கடந்து ரசிகர்களை கொண்டது ஐபிஎல் தொடர். ஐபிஎல் போட்டிகளில் அனல் பறப்பதால் ஒவ்வொரு வருடமும் இத்தொடரை கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர்.
இதனை பூர்த்தி செய்யும் விதமாக, ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் நாளை (22-ம் தேதி) தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது X தள பக்கத்தில் தோனி தனது கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
OFFICIAL STATEMENT: MS Dhoni hands over captaincy to Ruturaj Gaikwad. #WhistlePodu #Yellove
— Chennai Super Kings (@ChennaiIPL) March 21, 2024
இதன் வாயிலாக தோனியின் 13 ஆண்டுகால சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக 5 சாம்பியன் கோப்பைகளை வென்ற தோனி, கேப்டன் பொறுப்பை விட்டுகொடுத்துள்ளார். இதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பான அறிவிப்பை ஐபிஎல் நிர்வாகமும் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Presenting @ChennaiIPL's Captain - @Ruutu1331 🙌🙌#TATAIPL pic.twitter.com/vt77cWXyBI
— IndianPremierLeague (@IPL) March 21, 2024
அதோடு, வழக்கமாக ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னர் அனைத்து அணிகளின் கேப்டன்களும் ஐபிஎல் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். அந்த வகையில் சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் சென்னை அணியின் கேப்டனாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படத்தையும் ஐபிஎஸ் நிர்வாகம் தனது X தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
𝐈𝐭'𝐬 𝐒𝐡𝐨𝐰𝐓𝐢𝐦𝐞!
The #TATAIPL is here and WE are ready to ROCK & ROLL 🎉🥳🥁
Presenting the 9 captains with PBKS being represented by vice-captain Jitesh Sharma. pic.twitter.com/v3fyo95cWI
— IndianPremierLeague (@IPL) March 21, 2024